வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்
வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பாக மேயருக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியினருக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா மாநகரசபை மேயர் சு.காண்டீபனின் அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
கலந்துரையாடல்
இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னமபலம், செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன், கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தவபாலன் மற்றும் கட்சியின் வவுனியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் இதன்போது பிரசன்னமாகி இருந்தனர்.
இந்த சந்திப்பில் சமகால அரசியல் விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், வவுனியா மாநகரசபையின் செயற்பாடுகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








