சிறுபான்மை சமூகம் தொடர்பிலான அரசியல் தீர்வு தொடர்பான கலந்துரையாடல்
சிறுபான்மை சமூகத்துக்குள் சிறுபான்மையாக வாழும் மக்களின் ஓரங்கட்டப்பட்ட சமூகத்தின் அரசியல் தடை தொடர்பிலான வட்ட மேசை கலந்துரையாடல் திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இன்று (15) இடம் பெற்றது.
தார்மீக கடமைக்கான இலட்சிய நிறுவனம்(AIMG) ஏற்பாட்டில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது சிறுபாண்மையின மக்கள் அரசியலுக்குள் வருவதற்கான தடைகளும் , சவால்கள் அதற்கான தீர்வுகளும் உள்ளிட்ட பல விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
கலந்துரையாடல்
ஓரங்கட்டப்பட்ட சமூகமும் எதிர்காலத்தில் சகல உரிமைகளுடனும் வாழக் கூடிய சூழலை உருவாக்கவும் இதன் போது தெளிவூட்டப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பெண் அரசியல் சிவல் செயற்பாட்டாளர்கள்,ஊடகவியலாளர்கள் ,இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri