மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகரவால் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுச் செயல்முறையை விரைவுபடுத்தும் நோக்கில், மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நேற்று (13 ) மக்கள் பொதுமக்கள் சந்திப்பு நடைபெற்றது.
உரிய அதிகாரிகள்
குறித்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜே.ஜே.முரளிதரன், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைச் செயலாளர்கள் மற்றும் ஏனைய பொறுப்பான நிறுவனங்களின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை, பொறுப்பான அதிகாரிகளிடம் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்ட அதேவேளை ஆளுநர், மற்றும் மாவட்டச் செயலாளர் ஆகியோரிடமும் தங்கள் பிரச்சினைகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகவீனமடைந்து சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் இருவருக்கு ஆளுநர் நிதியத்தின் மூலம் சிகிச்சைக்கான நிதியுதவியாக காசோலை உதவித்தொகை இதன்போது வழங்கப்பட்டது.





