கிளிநொச்சியில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA) மற்றும் நிழல் அமைச்சுக்களின் ஊடக நாடுதளுவிய ரீதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடக கிளிநொச்சி மாவட்டத்திற்கான ஒதுக்கிட்டில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடyானது கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தலைமையில் இன்று (19.04.2024) இடம்பெற்றுள்ளது.
சீன அரசின் உதவி
சுற்றுலா விடுதி மண்டபத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக விவசாய நடவடிக்கை, குளங்கள் புனரமைப்பு மற்றும் குடிநீர் விநியோகம், சந்தைக் கட்டிடம் அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக்ச் கிளிநொச்சி பொதுச் சந்தை கட்டிடத் தொகுதி மற்றும் பேருந்து நிலையத்தை மேம்படுத்துவதற்காக 1680 மில்லியன் ரூபா ஒதுக்கீடு, "அனைவருக்கும் புகலிடம்" எனும் தொனிப்பொருளில் 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டிலான வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டம் மற்றும் 3200 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக சீன அரசின் உதவியிலான இரண்டாயிரம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கான வழிவகைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
இது தவிர சமகாலத்தில் செயற்படுத்துவதற்கான நிலையில் உள்ள 500 மில்லியன் ஒதுக்கீட்டிலான பூநகரி நகராக்க திட்டம் மற்றும் 10 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் மாவட்டத்திலுள்ள கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான சாத்தியமான முன்மொழிவுகளும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த கலந்துரையாடலில் கரைச்சி கண்டாவளை பிரதேச செயலாளர்கள், வடமாகான விவசாய அமைச்சின் செயலாளர், விவசாய திணைக்கள பதவி நிலை உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அமெரிக்காவுடன் மோதல்... எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை குறிவைக்கும் சீனா News Lankasri
