வவுனியா மாநகரசபையின் செயற்பாடுகள் தொடர்பாக ஆளும் கட்சி பிரதிநிதிகள் கலந்துரையாடல்
வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகளை திறம்பட முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் மாநகர சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
குறித்த கலந்துரையாடலானது நேற்று(2) வுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றுள்ளது.
இதன்போது மாநகர சபையின் முதல்வர் உட்பட்ட ஆளும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு இருந்தனர்.
பல்வேறு முடிவுகள்
அத்தோடு கட்சிகளின் சார்பில் தமிழரசு கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம், தமிழீழ விடுதலை இயக்கம் சார்பில் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சிறிரெலோ கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் ப. உதயராசா, ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் க. துளசி, தமிழ் காங்கிரஸ் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். தவபாலன், அகில இலங்கை மக்கள் சக்தி சார்பில் அதன் பங்காளி கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பல்வேறு முடிவுகள் சாதகமாக எட்டப்பட்டதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தார்.
நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




