மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முன்மொழிவு குறித்து தேசிய பேரவையில் கலந்துரையாடல்
மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபை உள்ளிட்ட சில நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பணிப்பாளர் சபை மற்றும் அதிகாரிகளை தேசிய பேரவைக்கு அழைத்துக் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
இந்த தேசிய பேரவைம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில், பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் பங்குபற்றலுடன் நேற்று (19.01.2023) நாடாளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் அனுமதியுடன் அண்மையில் இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட மின்சாரக் கட்டண அதிகரிப்புக் தொடர்பிலான முன்மொழிவுக்கு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விரைவில் முடிவொன்றை வழங்க வேண்டும் என மின்சார சபையின் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு
இதன்போது முதலில் தேவையான கணக்கீடு பூர்த்திசெய்யப்பட வேண்டும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இலங்கை மின்சார சபை மற்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இறுதி முடிவொன்றை எடுக்க வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 24ஆம் திகதி மீண்டும் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் தேசிய பேரவைக்கு அழைக்கவும் இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மை
இந்நிலையில் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவின் இறுதி அறிக்கை வரைபையும் உபகுழுவின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக தேசிய பேரவையில் முன்வைத்துள்ளார்.
தேசிய பேரவைக் கூட்டத்தில் அமைச்சர்களான டிரான் அலஸ், கஞ்சன விஜேசேகர, நசீர் அஹமட், இராஜாங்க அமைச்சர்களான டி.வி.சானக, (சட்டத்தரணி) சிசிர ஜயகொடி, இந்திக அநுருத்த, அநுராத ஜயரத்ன நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்டன் பெர்னாந்து, பாட்டலி சம்பிக்க ரணவக, ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க மற்றும் நாடாளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
