யாழ் வணிகர் கழக நிர்வாகிகளுக்கும் மாநகர சபை முதல்வருக்கும் இடையில் கலந்துரையாடல்
யாழ்.வணிகர் கழக நிர்வாகிகளுக்கும் மாநகர சபை முதல்வர் தலைமையிலான உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது யாழ்.வணிகர் கழக அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடல்
இதன்போது, யாழ்ப்பாண நகர அபிவிருத்தி மற்றும் நகரத்தில் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் 15 முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது நிரந்தர வர்த்தகர்களுக்கு இடையூறாக செயற்படும் அங்காடிக் கடைகளை நகரத்தில் இருந்து முற்றாக தடைசெய்தல், நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள நவீன சந்தை கடைத் தொகுதிகளை முற்றாக புனரமைப்பு செய்து, போதியளவு மலசலகூடங்கள் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த ஆவன செய்தல் என பல்வேறு விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க யாழ் மாநகர சபை முதல்வரிடம் கோரிக்கை விடப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



