கிழக்கு மாகாண ஆளுநருக்கும் தேசிய பாதுகாப்பு கல்லூரி அதிகாரிகளுக்கும் இடையே விசேட கலந்துரையாடல்
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவுக்கும் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சி பெறும் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பானது நேற்று(14) திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
பாதுகாப்பு அதிகாரிகள்
பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் கற்கைக் காலத்தில் திருகோணமலை மாவட்டத்திற்கு மேற்கொண்ட களப்பயணத்தின் போது ஆளுநருடன் ஒரு சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது, கிழக்கு மாகாணத்தில் நிலவும் சமூக மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆளுநர் பார்வையாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
அத்துடன் மாகாணத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறித்த பிரச்சினைகளின் போது பாதுகாப்புத்துறையினர் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.




சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. Cineulagam