பெரும்போக நெற்செய்கைக்கு தேவையான பசளைகளை உறுதிப்படுத்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
2025/2026 பெரும்போக நெற் செய்கைக்கு தேவையான பசளை மற்றும் இரசாயனங்களினை உறுதிப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி விடயம் தொடர்பாக, 29.09.2025 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட விவசாயக் குழுக்கூட்டத்தின் போது விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பெரும்போக நெற்செய்கைக்கு தேவையான பசளை மற்றும் பூச்சி நாசினிகள் போதுமான அளவில் காணப்படுவதனை உறுதிப்படுத்தும் முகமாக இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
கலந்துரையாடல்
பசளை மற்றும் பூச்சி நாசினிகளின் விநியோகிக்கும் வர்த்தக நிலையங்கள் மற்றும் நிறுவனங்களுடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, தேசிய உர செயலக அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள் வர்த்தகர்கள் ,விவசாயிகள் கலந்து கொண்டனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

சக்தி படித்த குணசேகரன் மறைத்து வைத்த கடிதம், யார் எழுதியது தெரியுமா, என்ன இருந்தது?.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
