அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் (Photos)
கிளிநொச்சி மாவட்டத்தில் இறுதியாக நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று பகல் 10மணிக்கு நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் அக்கராயன் ஆற்றிலிருந்து ஆறுகளைப் பாதுகாப்போம் எனும் வேலைத்திட்டத்தில் ஆற்றிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மணல் விடயம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் இரணைமடு நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், கடந்த பெரும் போகத்தின் போது சேதனப்பசளை பயன்படுத்தியதால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பு, அவற்றுக்கான நஷ்டஈடு கிடைக்காமை, மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு கிடைக்காமை என பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் துறைசார் திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.



திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam