குருநாகல் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் முதலாம் கட்டத்தின் கீழ் திறப்பது குறித்த கலந்துரையாடல்

Government Election Johnston Fernando Petrol
By Independent Writer Oct 19, 2021 12:33 PM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

குருநாகல் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் முதலாம் கட்டத்தின் கீழ் இம்மாதம் 21 ஆம் திகதி திறப்பது குறித்த கலந்துரையாடல் ஆளும் தரப்பு பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் (Johnston Fernando) தலைமையில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடல் நேற்று (18) குருநாகல் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்களின்படி பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் மற்றும் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது. 

அதன்படி, குருநாகல் மாவட்டத்தில் உள்ள குருநாகல், இப்பாகமுவ, நிகவெரட்டிய, மஹவ, குளியாப்பிட்டிய மற்றும் கிரியுல்ல கல்வி வலயங்களைச் சேர்ந்த அதிகாரிகள் தனித்தனியாக வரவழைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் தற்போதைய நிலை குறித்த தகவல்கள் பெறப்பட்டன. 21 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகளுக்குத் தேவையான சுகாதார வசதிகளை வழங்கவும் இங்கு முடிவுகள் எடுக்கப்பட்டன.

மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு பட்டதாரி அபிவிருத்தி அதிகாரிகளை நியமிக்கவும் முன்மொழியப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் அனைத்து பாடசாலைகளுக்கும் இரண்டு போலீஸ் அதிகாரிகளை நியமிக்க எதிர்பார்ப்பதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

அதன் பின்னர், ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதில் அளித்தார்.

21 ஆம் திகதி பாடசாலைகள் திறப்பது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்.

ஆசிரியர்கள் 21 ஆம் திகதி பாடசாலைகளுக்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன். குழந்தைகளை நேசிக்கும் ஆசிரியர்கள் தான் இலங்கை வரலாற்றில் எப்போதும் இருந்திருக்கிறார்கள்.

ஜேவிபி பாடசாலைகளை மூட அழைப்பு விடுத்த போது இந்த ஆசிரியர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்த வரலாறு உள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களிடம் பாடசாலைகளை மூட சொன்னார்கள்.

எனவே, ஜேவிபி மற்றும் பிற தொழிற்சங்கங்கள் என்ன கூறினாலும், பெரும்பாலான ஆசிரியர்கள் 21 ஆம் திகதி பாடசாலைக்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன் என்றார்.

பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

அவை சட்ட ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் நடக்கும் விஷயங்கள். யாரும் வேலைக்கு வரவில்லை என்றால் அது பிரச்சினையாகிவிடும். அது பொதுவான விடயம். அரசாங்கத்தால் சம்பளம் கிடைக்கிறதென்றால் வேலைக்கு வரும்படி கேட்டால், நீங்கள் வேலைக்கு வர வேண்டும்.

இது பொதுவானது, ஆசிரியர்கள் மட்டுமல்ல வேறு யார் வேலைக்கு வராவிட்டாலும் நடக்கக் கூடியதே. இதற்கு செயலாளர், பிரதேச செயலாளர் மற்றும் கீழ்மட்ட பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு பொருந்தாது. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பொருட்களின் விலை உயர்வு மற்றும் டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நம் உயிரை எப்படி காப்பாற்றுவது என்பது தான் எங்களுக்கு இருந்த மிகப்பெரிய கேள்வியாகும். நாம் அந்த தொற்றை சந்தித்த போது இந்த நாட்டு மக்களை பட்டியில் போடவில்லை.

பின்னர் அந்த பிரச்சினையின் மூலம் வேறு சில பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.சில கட்டுப்பாடுகளை விதிக்க நேர்ந்தது. கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் போது வரிசைகள் உருவாகிறது. நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம்.

பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது விலை உயரும். அது நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. இது எந்த அறிவார்ந்த நபருக்கும் தெரிந்த மற்றும் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்று. இப்படித்தான் விலை உயர்கிறது.

அதனால் நாங்கள் பால் மா , எரிவாயு பெற வரிசை , சீனி மற்றும் அரிசி பிரச்சினைகள் ஏற்பட்டன. இந்த நெருக்கடிகள் சில வாரங்களில் குறைந்துவிடும். நெருக்கடி நிலையொன்றை உருவாக்க எதிர்க்கட்சிகள் இதையெல்லாம் செய்கின்றன.

எதிர்காலத்தில் எரிபொருள் பெறவும் வரிசைகள் இருக்குமா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் .

நான் அவ்வாறு சொல்ல மாட்டேன். ஐக்கிய தேசியக் கட்சி தொழிற்சங்க அதிகாரி ஒருவர் செய்த குழப்பத்தால் அந்த நிலை ஏற்பட்டது. குறிப்பிட்ட நாளில் எண்ணெய் தீர்ந்துவிடும் என்றார். மக்கள் சென்று வரிசையில் காத்திருந்தனர். ஆனால் எண்ணெய் தீர்ந்துவிடவில்லை. இவர்களின் அரசியல் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவது இந்த நாட்டின் அப்பாவி மக்கள்தான்.

எனவே, நாட்டு மக்களை கஷ்டத்தில் தள்ள எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படும் கருத்துகள் தான் இவை. அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் இதை எதிர்கொள்கிறோம்.

தற்போதைய நிலையில் அரசாங்கத்தால் தேர்தலை நடத்தி கிராமங்களுக்குச் செல்ல முடியுமா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

கிராமத்திற்கு செல்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எங்களால் கிராமத்திற்கு செல்ல முடியாது என்று பலர் நினைக்கிறார்கள். கோவிட் பிரச்சினை வந்தபோது தேர்தல் நடத்தக் கிடைக்காது என்றார்கள். தேர்தலை ஒரு மீட்டர் இடைவெளி வைத்து நடத்தினால் 3 நாட்கள் பிடிக்கும். இறுதியாக ஜே.ஆர். தயாரித்த தேர்தல் முறையின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பெற்றது.

எங்களால் கிராமத்திற்கு செல்ல முடியாது என்று யாராவது நினைத்தால். இது வெறும் கனவு. நீங்கள் கிராமத்திற்கு செல்ல தேவைப்படும் போது, நாங்கள் கிராமத்திற்கு சென்று காண்பிப்போம். எனவே தேர்தலை நடத்த வேண்டும். மக்கள் சாகும் போது மற்றும் கோவிட் தொற்று இருந்த போது தேர்தலை நடத்திய நாடு இது.

நல்லாட்சி அரசாங்கம் தேர்தலை நடத்தவில்லை. இரண்டரை ஆண்டுகளாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடக்கவில்லை. எனவே, அரசாங்கம் தொடர்பில் மிகவும் அதிருப்தி நிலை உள்ளதென்றால் நாம் ஒரு தேர்தல் பற்றி பேசுவதாக இருந்தால் அது குறித்து எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சி அடைய வேண்டும்.

நாம் கிராமத்திற்கு சென்று கிராமத்தை வெற்றி கொண்டு காண்பிப்போம். தேர்தலை சரியான நேரத்தில் நடத்த வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியான பயணம் செல்ல திட்டமிடுகிறதா என்ற ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

நீங்கள் அவர்களிடம் தான் இதனை கேட்க வேண்டும்.

உங்களுக்கு அவர்களின் ஆதரவு தேவையா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

ஆதரவு தேவையில்லை என்று நாங்கள் கூறவில்லை. யாராவது தனியாகச் செல்ல விரும்பினால், அவர்களே முடிவு செய்ய வேண்டும். மற்ற கட்சிகளின் விடயங்களை எங்களால் தீர்மானிக்க முடியாது. நாங்கள் இப்போது தனி கட்சியில் இருக்கிறோம். அவர்கள் தனி வழியில் செல்ல வேண்டுமா என்று நீங்கள் அவர்களிடம் கேட்க வேண்டும். அதைப் பற்றி எங்களிடம் கேட்டுப் பயணில்லை.

அரசாங்கத்த்தால் முடியாவிட்டால் கைவிட்டு செல்ல வேண்டும். சுபீட்சமான நாட்டை உருவாக்குவதாக கூறியவர்கள் இன்று குப்பை தேசமொன்றை உருவாக்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியது குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

குப்பைகள் குவிந்த நாட்டை தான் நாங்கள் காப்பாற்றினோம். கடந்த நல்லாட்சி அரசாங்கம் எந்த குப்பைகளையும் அகற்ற முடியாத அரசாங்கமாக இருந்தது. ஜனாதிபதி தேர்தல் வெற்றியுடன் 48 மணி நேரத்திற்குள், இந்த நாட்டை அழகுபடுத்தினோம்.

குப்பைகளை யார் கொண்டு வந்தார் என்பதை சஜித் மறந்துவிட்டார். இன்று அவரின் கட்சி எம்.பி.க்கள் அவர் போக வேண்டும் என்கிறார்கள். குடைகளை வைத்தும் , குடைகளை மடித்து வைத்து நனைந்தவாறும் தனது கட்சி தலைமையையும் எதிர்க்கட்சி தலைமையையும் காப்பாற்ற அவர் போராடுகிறார் . இவற்றை பார்க்கும் போது, எனக்கு பரிதாபமாக இருக்கிறது.

தேர்தலை முன்னிட்டு பொருட்களின் விலையை குறைக்கவும், மக்களின் ஆதரவைப் பெறவும் தயாராக இருப்பதாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

இல்லை. மக்களின் அபிமானத்தை புதிதாக பெறவேண்டிய தேவை எமக்கு இல்லை. இந்த நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்றியதே எமக்குப் போதும். எதிர்க்கட்சிகள் பல்வேறு விஷயங்களில் சென்று தொங்கினாலும், இந்த நாட்டு மக்கள் நன்றி மறக்காதவர்கள்.

பொருட்களின் விலைகளை அல்ல, மக்களின் உயிரைக் காப்பாற்றுவது மிகப்பெரிய விஷயம் என்று மக்களுக்குத் தெரியும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சரியான முடிவுகளை எடுத்ததால் நீங்களும் நானும் இன்று இங்கஇருக்கிறோம். இல்லாவிட்டால் என்னை உங்களால் பார்க்க முடிந்திருக்காது. அல்லது என்னால் உன்னை பார்க்க முடிந்திருக்காது.. எனவே இவை பிரச்சனைகள் அல்ல, இவை தற்காலிகமானவை.

கடந்த அரசாங்கம் மத்திய வங்கியைக் கொள்ளையடித்ததை போன்று இந்த அரசாங்கத்தின் மீது அகற்ற முடியாத எந்த முத்திரையும் குத்தப்படவில்லை. இந்த கோவிட் தொற்று நோயால் வந்த பிரச்சினைகள் மட்டுமே எங்களிடம் உள்ளன. ஏனைய நாடுகளையும் பாருங்கள். இங்கிலாந்தால் எண்ணெயைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.

அதனால் எங்களுக்கு தற்காலிக பிரச்சினைகள் தான் உள்ளன. இவை விரைவில் சீராகும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு நாடு விரைவில் முழுமையாக திறக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

பசளை பிரச்சினை தொடர்பில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

விவசாயிகளின் பிரச்சினை மிக முக்கியமான பிரச்சினை. ஆனால் விவசாயிகளுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். இந்த கமநல நிலையங்களுக்கு தீ வைத்த ஜேவிபி தான் பல இடங்களில் உள்ளது. அதன் பின்னால் ஐ.தே.கசவும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஓடுகின்றன. அதுதான் உண்மை.

ஒரே மாதிரியான பொம்மைகளை தயாரித்து அதன் மீது போஸ்டரை அச்சிட்டு இவர்கள் பிரச்சினைகளை உருவாக்கப் பார்க்கிறார்கள். விவசாய சமூகத்தின் சார்பில் ஜனாதிபதி எடுத்த முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம். இது ஒரு புதிய விடயம். மேலும், அந்த மூன்று கட்சிகளின் கொள்கையும் சேதனப் பசளை பயன்பாட்டுக்கு செல்வதாகும்.

சிறுநீரக நோயாளிகள் இறக்கின்றனர். அதற்காக மருத்துவமனைகளை கட்ட வேண்டியுள்ளது என்ற விடயத்துடனே இந்தப் பிரச்சினை தொடங்கியது. நாம் இப்போது சேதனப் பசளை பயன்பாட்டை தொடங்கும் போது, நாங்கள் தொடங்கிய விதத்தில் தவறு உள்ளது என்று சொல்லப்படுகிறது. இந்த பிரச்சினைகள்களை விவசாயிகளைக் கொன்றவர்கள் தான் முன்னெடுக்கிறார்கள் என்பனை உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.

இந்த கலந்துரையாடலில் வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளூரே (Raja Kollure)., குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் குருநாகல் மாவட்டக் குழுவின் தலைவர் மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள், குருணாகல் மாவட்ட செயலாளர் ஆர்.எம்.ஆர். ரத்னாயக்க(R.M.R. Ratnayake), மாகாண கல்வி அமைச்சசு அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகள சுகாதார அதிகாரிகள், பொலிஸார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, வவுனியா, வள்ளிபுனம்

18 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
38ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
மரண அறிவித்தல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Scarborough, Canada

17 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில், யாழ்ப்பணம், London, United Kingdom

13 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, காங்கேசன்துறை, கோண்டாவில்

18 Oct, 2021
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

16 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wellawatte

15 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Wembley, United Kingdom

18 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இன்பர்சிட்டி, London, United Kingdom

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US