கிளிநொச்சி மாவட்டத்தின் வியாபார சேவை நிலைய செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்ட செயலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வியாபார சேவை நிலையத்தின் செயற்பாடுகளை ஆரம்பித்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் தலைமையில் நேற்று (10.05.2024) இடம்பெற்றுள்ளது.
வியாபார செயன்முறை
இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிறிய நடுத்தர மற்றும் நுண் நிலையிலுள்ள முயற்சியாளர்களுக்கு அவர்களது வியாபார விருத்திக்கு தேவையான சேவைகளை வழங்குவதற்கான நடைமுறைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த வியாபார சேவை நிலையத்தினூடாக வியாபார பதிவு செயன்முறையை எளிமைப்படுத்துவதுடன் தொழில்நுட்பம், தரக் கட்டுப்பாடு மற்றும் சந்தைகளை அணுகல் போன்ற செயற்பாடுகளுக்கு உதவிகள் வழங்கப்படவுள்ளது.
மேலும் நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு சேவையளிக்கும் வகையில் வியாபார அபிவிருத்தி சேவை வழங்குநர்கள், ஒழுங்குபடுத்தல் அதிகார அமைப்புகள், நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுடன் தொடுக்கப்பட்ட இணைய கட்டமைப்பொன்று வடிவமைக்கப்படவுள்ளன.
இவை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட செயலகங்களில் நிறுவப்பட்டு, நிர்வகிக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், வடமாகாண தொழில் துறை திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கான சேவை வழங்குநர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri