எல்லை தாண்டிய மீன்பிடிக்கு அரசாங்கமே ஒத்துழைப்பு வழங்குகிறது! எழுந்துள்ள குற்றச்சாட்டு
வடக்கு மாகாண கடற்றொழில் இணையத்தின் கடற்றொழில் சட்டம் தொடர்பான கலந்துரையாடலும் ஊடக சந்திப்பும் நேற்றையதினம்(25) யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் இடம் பெற்றது.
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை தடுக்கும் வகையிலன 1996 ஆம் ஆண்ட 02 ஆம் இலக்க சட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
தடை செய்யப்பட்ட மீனவ உபகரணங்களைப்பயன்படுத்துதல் தொடர்பான விடயங்களை சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவுள்ளன.
சட்ட ஆதரவுடன் கடற்றொழில் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணம் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்து நீதிமன்றை நாடவுள்ளோம் என குறிப்பிட்டனர்.
எம்.எம்.ஆலம்
கடற்றொழிலாளர்கள் வாழ்வியலில் முன்னேற்றம் இல்லை சட்டங்கள் வெறுமனே புத்தகங்களில் மாத்திரமே காணப்படுகிறது. கடற்றொழிலாளர்களின் தடைக்காலத்திலும் எல்லை தாண்டி வருவதனை அவதானிக்க முடிகிறது.

தற்போதைய தேர்தலின் பின்னர் ஆட்சியமைக்கும் கட்சி கடற்றொழிலாளர்கள் பிரச்சனைகள் தொடர்பாக இராஜதந்திர ரீதியாக சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் தமது பிரச்சனைகள் தொடர்பாக நீதிமன்றினை நாடியுள்ளனர். எனவே அது போன்ற ஏனைய கடற்றொழிலாளர்களும் எதிர்வரும் காலத்தில் ஏனைய கடற்றொழிலாளர்களின் பிரச்சனை தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அ.அன்னராசா
சிறு கடல் தொழிலாளர்களின் தொழிலை இல்லாது செய்யும் வகையில் ஆட்சியிலுள்ளவர்கள் வட பகுதியில் சட்ட விரோத தொழிலை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதில்லை சட்ட விரோத தொழிலையும் கட்டுப்படுத்துவதில்லை எல்லை தாண்டிய மீன்பிடிக்கு அரசாங்கமே ஒத்துழைப்பு வழங்குகிறது.

அண்மையில் புத்தளம் கற்பிட்டி கடற்றொழிலாளர்களுக்கு சட்டவிரோத தொழிலை செய்வதற்கு நான்கு மாதத்தில் அனுமதி தருவதா ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சீன கடலட்டையினை மன்னார் கடல் தொடக்கம் எதிர்வரும் காலத்தில் அபிவிருத்தி என்னும் போர்வையில் முன்னெடுக்கவுள்ளது. நாம் அதற்கு எதிரானவர்கள் இல்லை ஆனால் நீங்கள் எமது தமிழ்க் கடலினை அழிக்கின்றீர்கள்.

ஜனாதிபதியை சந்திப்பதற்கு நாம் ஆளுநர் ஊடாக அனுமதி கோரியும் இதுவரையும் எமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அனுர மீதுள்ள நம்பிக்கையும் இல்லாது போய் விட்டது.

எம்மோடு சட்ட விரோத தொழிலை எதிர்த்து வீதியில் போராடிய அமைச்சர் இப்போது கடற்றொழில் அமைச்சராக வந்த பின்னர் இப்போது பதவியைப் பெற்ற பின்னர் அதனைக்கருத்தில் கொள்ளாது இருக்கிறார்.
அமைச்சர் தற்போது நோர்வே முதலீட்டாளர்களை சந்தித்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர். நோர்வேயிலிருக்கும் தமிழர்கள் இந்த விடயம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சருக்கு தெளிவுபடுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 14 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri