சமூக ஊடகங்களை கலக்கி வரும் பதிவுகள்!! மடு திருத்தலத்தில் ரணிலால் ஏற்பட்ட சர்ச்சை
மடுத் தேவாலயத்தில் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றியதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் ஏற்பட்ட சர்ச்சை தற்பொழும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
மன்னார் மடுத் திருவிழாவின் ஆணி மாத திருவிழா இலட்சக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 15 திகதி செவ்வாய்க்கிழமை இடம் பெற்றிருந்தது.
இலங்கை முழுவதும் இருந்து சுமார் ஐந்து இலட்சம் பக்தர்களும் அதே நேரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தொல்லியல்துறைக்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, செல்வம் அடைக்கலநாதன், இராஜங்க அமைச்சர் காதர் மஸ்தான் உட்பட பல அரசியல் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிலையில் திருவிழா திருப்பலி நிறைவடைந்த நிலையில் வழக்கத்திற்கு மாறாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு உரையாற்ற அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் ரணில் விக்ரமசிங்கவிற்கு மடு திருவிழா திருப்பலியின் பின்னர் உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படமை தொடர்பில் சமூக வலைதளங்களில் எதிர்ப்புக்கள் கிழம்பியுள்ளது .
'மடுமாதாதலம் தேவாலயமா? அரசியல் மேடையா?'
'மல்க்கம் ரஞ்சித்தால் மன்னாருக்கு தெற்கிலிருந்து இறக்கப்பட்ட ஆயர் எவ்விதத்தில் ஆலயத்தில் ரணில் பேச அனுமதிக்க முடியும்?'
' ஏனைய குருக்கள் மௌனிகளானது ஏன்?'
' தமிழர் என்ற ஒரே காரணத்தினால் சிங்களத்தால் கொல்லப்பட்ட மன்னார் திருச்சபைக்குட்பட்ட குருமாருக்குதானும் நீதி கிடைத்துவிட்டதா?'
'தமிழன் குருதி தோய்ந்த கரங்களோடு பீடத்தில் ரணில் ஏற பாவமன்னிப்பு யார் கொடுத்தார்?' எனவும் மத ஸ்தலங்களை அரசியல் மேடையாக்க அனுமதிக்க வேண்டாம் என்ற அடிப்படையிலும் தமிழ் சிங்கள சமூக ஆர்வலர்கள் எதிர்பு பதிவுகளை இட்டு வருகின்ற நிலையில் தற்போது அப்பதிவுகளை பல நூற்றுக்கணக்கானவர்கள் பகிர்ந்தும் வருகின்றனர்.









படப்பிடிப்பில் கொண்டாட்டத்தில் இறங்கிய கார்த்திகை தீபம் சீரியல் பிரபலங்கள்... என்ன ஸ்பெஷல், போட்டோஸ் இதோ Cineulagam

அதிக அளவில் நஷ்டம்.., தான் விளைவித்த காய்கறியை வைத்து 10 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி வழங்கும் விவசாயி News Lankasri
