சர்வதேசத்தை ஏமாற்ற கண்துடைப்பு நாடகம்: அரசு மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு - செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தில், திருத்தங்களை மேற்கொள்வதாகக் கூறி ஐரோப்பிய ஒன்றியத்தையும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையையும் அரசாங்கம் ஏமாற்றி வருவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள திருத்தங்கள் வெறுமனே கண்துடைப்பு நாடகம் என அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,