தெனியாய பகுதியில் இரண்டு மர்மமான சுரங்கங்கள் கண்டுபிடிப்பு! (Photo)
தெனியாய, விஹாரஹேன பிரதேசத்தில் இரண்டு சுரங்கப்பாதைகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஹாரஹேன - ஆராதெனிய வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்காக வீதியின் இருபுறமும் கரைகள் வெட்டப்படும் போதே ஆரதெனிய சந்திக்கு அருகில் இரண்டு சுரங்கப்பாதைகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
இந்த சுரங்கப்பாதைகள் ஆரம்பத்தில் இரண்டு சுரங்கப்பாதைகளாக இருப்பதாகவும், சுரங்கப்பாதையின் இறுதிப்பகுதி வெளியில் தெரியவில்லை எனவும் கூறப்படுகின்றது. இந்த சுரங்கப் பாதை பயணிக்கும் திசையில் வீடுகள் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சுரங்கங்கள் எப்போது கட்டப்பட்டன? அல்லது இயற்கையானதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இதேவேளை, குறித்த சுரங்கப்பாதைகள் தொடர்பில் ஆய்வு செய்ய இதுவரை எந்தவொரு நிறுவனமும் முன்வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan