இலங்கையில் ஜேம் போத்தலில் உயிருடன் புழு கண்டுபிடிப்பு
இலங்கையின் முதல்தர நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் ஜேம் போத்தல் ஒன்றில் புழு ஒன்று உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
வாதுல பிரதேசத்தை சேர்ந்த தம்பிக்க சஞ்ஜீவ அபேசுந்தர என்பவரின் மகனே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
தம்மிக்க என்பவர் அண்மையில் வாதுவ பிரதேசத்தில் உள்ள பிரபல சுப்பர் மார்க்கெட் ஒன்றில் தனது மகனுக்காக ஜேம் போத்தல் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.
அவரது மகன் ஜேம் போத்தலில் உள்ள ஜேமை உணவிற்கு எடுக்க தயாரான போது அதற்குள் உயிருடன் புழு ஒன்று காணப்பட்டுள்ளதனை அவதானித்துள்ளார்.
உடனடியாக இது தொடர்பில் குறித்த நிறுவனத்தின் நுகர்வோர் விவகார பிரிவிற்கு அறிவித்த போதிலும் கடந்த 10 நாட்களாக, நிறுவன தரப்பினர் எவ்வித பதிலும் வழங்கவில்லை என தம்மிக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்த தம்மிக்க உணவு பாதுகாப்பு தொடர்பான ஆலோசகர்களில் ஒருவராகும்.
இதன் காரணமாக அவர் இந்த விடயத்தை ஊடகங்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். அத்துடன் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam