இஸ்ரேலில் புதிய வகை கோவிட் கண்டுபிடிப்பு
கோவிட் வைரஸின் புதிய திரிபான ஒமைக்ரோன் வைரஸின் அச்சுறுத்தலால் உலக நாடுகளை கவலையடைந்துள்ள நிலையில், தற்போது புதிதாக உருமாற்றமடைந்த கோவிட் வரைஸ் இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ளது.
கண்டறியப்பட்ட புதிய வகை வைரஸிற்க்கு புளோரோனா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் தலைநகரமான டெல் அவிவ் நகரிலுள்ள மருத்துவமணைக்கு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இன்புளூயன்ஸா காய்ச்சலுடன் கோவிட் அறிகுறிகளும் இருப்பது கண்டறியப்பட்டது.
குறித்த பெண்ணுக்கு லேசானா அறிகுறிகளே தென்பட்டுள்ளதனால் பெரிய அளவில் உடல்நல பாதிப்புக்கள் எதுவும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கர்ப்பிணி பெண்ணின் உடலிலிருந்து மாதிகரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.