நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் காணப்படும் புத்தாண்டு தள்ளுபடிகள் மூலம் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை (Consumer Affairs Authority), மக்களை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபையின் விசேட சோதனை மற்றும் விசாரணைகளின் பணிப்பாளர் சஞ்சய் வீரசிங்க கூறுகையில்,
இந்நாட்களில் ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை கொள்வனவு செய்வதில் நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டுவதால், தள்ளுபடிகள் மூலம் பொருட்களை கொள்வனவு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

தள்ளுபடி பொருட்களில் சிக்கல்
இவ்வாறான பண்டிகைக் காலங்களில் தள்ளுபடி பொருட்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விலையில் உள்ள வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு, தள்ளுபடி செய்யப்பட்ட பொருட்களின் தரம் குறித்தும் சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் எந்தவொரு பொருளுக்கும் பிரச்சினை ஏற்பட்டால், ஆதாரங்களுடன் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri