கர்ப்பிணி பெண்களுக்கு போஷாக்கான உணவு பொருட்கள் அடங்கிய பொதி வழங்கல் நிறுத்தம்
இலங்கை சதொச நிறுவனத்தின் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த போஷாக்கான உணவு பொருட்கள் அடங்கிய பொதி வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சதொச நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு 20 ஆயிரம் பெறுமதியான போஷாக்கு உணவு பொதிகளை வழங்கும் நடவடிக்கையின் கீழ் மாதாந்தம் 2 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போஷாக்கு உணவு பொதிகள் வழங்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் பண தட்டுப்பாடு காரணமாக அதனை நிறுத்தியுள்ளதாக சதொச நிறுவனத்தின் உயர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
சதொச நிறுவனத்தின் ஊடாக வழங்கப்பட்டு வந்த கர்ப்பிணி பெண்களுக்கான போஷாக்கான உணவு பொருட்கள் அடங்கிய பொதி நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் பெண்கள், சிறுவர் மேம்பாடு, முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி தொடர்பான இராஜாங்க அமைச்சு தகவல்கள் எதனையும் இதுவரை வெளியிடவில்லை எனவும் தெரியவருகிறது.
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan