பொறுப்பை செய்யாததால் ஏற்பட்ட அசௌகரியம்: தண்ணீரூற்றில் சம்பவம்
தண்ணீரூற்றில் குமுழமுனைச் சந்தியில் பிரதேச சபையினர் தம் பொறுப்பைச் செய்யாததால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
பொது இடத்தில் வைக்கப்பட்டுள்ள கும்பைகளை போடும் பெட்டிகளில் நிறைந்துள்ள குப்பைகளை உரிய கால இடைவெளியில் அகற்றாததால் அந்த சூழலில் குப்பைகள் நிறைந்துள்ளதனை அவதானிக்க முடிகின்றது.
மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் தண்ணீரூற்று குமுழமுனை வீதி இணைந்து கொள்வதால் முச்சந்தியாக அது அமைந்துள்ளது.
அதிக இடர்பாடு
அருகில் உள்ள கடையில் கடைக்காரரின் பராமரிப்பில் இருந்த இந்த குப்பைக் கூடைகள் அப்பகுதியில் வாழும் ஒரு முதியவரின் முன்மொழிவால் வீதிக்கு அப்பால் எடுத்து வைக்கப்பட்டதுடன் அது பொதுவான இடத்தில் வைக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தொடராக பல நாட்கள் மேற்கொண்டிருந்த அவதானிப்பின் மூலம் உரிய காலத்தில் குப்பைகள் அகற்றாதிருப்பதனை அவதானிக்க முடிந்தது.
கடைக்காரரின் பராமரிப்பில் இருந்த போது அந்த குப்பைக் கூடைகள் கடைக்கு அருகில் இருந்ததுடன் கடைக்காரரினால் உரிய காலங்களில் குப்பைகளை எடுத்துச் செல்ல பிரதேச சபையினருடன் இசைந்து வேலையற்ற முடிந்திருந்ததையும் அவதானிக்க முடிந்ததையும் குறிப்பிடலாம்.
குப்பைக்கூடை இருந்து அதில் குப்பைகளை போட்டும் அந்தச் சூழலினை சுத்தமாக பேணுவதில் அதிக இடர்பாடுகளை எதிர்கொள்வதாக அப்பகுதியில் உள்ள மக்கள் சிலர் குறிப்பிட்டுகின்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
