யாழில் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளின் எரிபொருள் நிரப்பும் பகுதியில் கொட்டப்பட்ட மண்
யாழ்ப்பாணத்தில் எரிபொருள் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளின் எரிபொருள் நிரப்பும் பகுதியில் விசமிகளால் மண் கொட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
யாழ். நகர் மத்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருளை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
விஷமிகளின் ஒழுக்காற்று செயல்
இந்த நிலையில் இளைஞர் ஒருவரும் தனது நவீன ரக மோட்டார் சைக்கிளை எரிபொருளுக்கான வரிசையில் நிறுத்தி விட்டு இரவு வீடு சென்றுள்ளார்.

மறுநாள் காலை எரிபொருள் விநியோகிக்கும் போது, வரிசையில் நின்று தனது மோட்டார்
சைக்கிளுக்கு எரிபொருளை நிரப்பிய பின்னர் மோட்டார் சைக்கிளை இயக்கிய போது அதன் இயந்திர
சத்தத்தில் வித்தியாசத்தை உணர்ந்துள்ளார்.
இதனை அடுத்து அவர் தனது மோட்டார்சைக்கிளை திருத்தகத்திற்கு கொண்டு சென்று சோதனை செய்த போது மோட்டார்சைக்கிளின் எரிபொருள் நிரப்பும் பகுதியில் மண் கொட்டப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மீள திருத்தல் நடவடிக்கை

இதன் காரணமாக மோட்டார்சைக்கிளின் உட்பாகங்கள் பழுதடைந்துள்ளதாக தெரியவருகிறது
தற்போதைய பொருளாதார நெருக்கடி காலத்தில் மோட்டார்சைக்கிள் உதிரிபாகங்களுக்கு தட்டுப்பாடு நிலவி அவற்றின் விலைகள் உச்சத்தை தொட்டுள்ள நிலையில் இளைஞரின் மோட்டார்சைக்கிளை மீள திருத்தி எடுப்பதற்கு பெருமளவான பணம் செலவழியும் என மோட்டார் சைக்கிள் திருத்துநர் தெரிவித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam