அமரவீர மற்றும் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை
கட்சியுடன் கலந்தாலோசிக்காது தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ள மகிந்த அமரவீர மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு எதிராக உரிய நேரத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சட்டம் அனைவருக்கும் பொதுவானது
ஒரு கட்சிக்குள் இரண்டு சட்டங்கள் இருக்க முடியாது எனவும் சட்டம் அனைவருக்கும் பொதுவானது எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சுரேன் ராகவன் மற்றும் சாந்த பண்டார
கட்சியுடன் கலந்தாலோசிக்காது பதவிகளை பெற்ற சாந்த பண்டார, சுரேன் ராகவன் ஆகியோருக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுத்து. அதேபோல், இவர்கள் இருவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஒரு தரப்புக்கு ஒரு சட்டமும் மற்றைய தரப்புக்கு வேறு ஒரு சட்டமும் இருக்க முடியாது.
நிமல் மற்றும் அமரவீர சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.





23 வயதில் ரூ. 250 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை!! யார் தெரியுமா? Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam
