ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
ஐக்கிய மக்கள் கட்சியை பிளவுபடுத்தி அழிக்க முயலும் கட்சி உறுப்பினர்கள் ஒழுக்காற்று குழுவின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
மேலும் அவர் தற்போதைய அரசாங்கத்திற்கு ஒரேயொரு மாற்றாக, ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஒழுக்கமே இருக்க வேண்டும் எனினும் ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்தவும் அழிக்கவும் சதி நடக்கிறது.
ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் கட்சிக்குள் பேச்சுக்கள் எதுவும் இடம்பெறவில்லை. அதேநேரம் விக்கிரமசிங்கவின் உறவினர்களின் கட்சி மற்றும் அவர்களது உறவினர்களின் ஊடகங்களுடன் தாம் தொடர்புகொள்ள விரும்பவில்லை என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சேனாரத்ன விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்கப்படுவார் என வெளியான தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
விரைவில் வெளியேற்றப்படும் வாய்ப்பு
இப்போது ராஜிதவை ஐக்கிய மக்கள் சக்தியுடன் வைத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று அவர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்த சில மணி நேரங்களிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சேனாரத்னவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
