பொலிஸ் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
பொலிஸ் நிலையங்களுக்கு வருகை தந்து, முறைப்பாடு அளிக்கும் தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒழுக்காற்று நடவடிக்கைக்கு மேலதிகமாக, பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் விதிகளின்படி அத்தகைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பும் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
எச்சரிக்கை
சுற்றறிக்கை ஒன்றின் ஊடாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பொலிஸ் நிலையங்களுக்கு பதிவாகும் முறைப்பாடுகளை பதிவு செய்து, விசாரணை செய்வது பொலிஸ் அதிகாரிகளின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்றும் பதில் பொலிஸ்மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு அளிக்க வரும் தரப்பினரிடம், முறைப்பாடுகளை ஏற்காமல், பல்வேறு காரணங்களைக் கூறி நிராகரிக்கப்படுவதாக எழுத்துப்பூர்வமாகவும், வாய்மொழியாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறுப்பு
பொலிஸ் நிலையப் பொறுப்பாளர்களும் பிற அதிகாரிகளும் இத்தகைய மறுப்புக்கு பல்வேறு காரணங்களை முன்வைப்பதாக தகவல்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கும் எந்தவொரு முறைப்பாட்டையும் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்க முடியாது என்று சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
தமிழகத்தில் விடுதலைப் புலிகளை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு.. நாடு திரும்பியதும் கைது! - அர்ச்சுனா எம்பி பகிரங்கம்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam