அனர்த்த நிவாரண விவகாரம் : தொடரும் முறைப்பாடுகள்
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடவத்தை மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவனிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
தாம் கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகம் எந்தவிதமான உதவிகளையும் செய்யவில்லை என்று குடவத்தை கிராம மக்களை நேற்று(16.12.2025) சந்திக்க சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவனிடம் முறையிட்டுள்ளனர்.

அண்மைய டித்வா புயல் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பல வீடுகள் உள்ளன என்றும் ஆனால் இதுவரை எந்தவித உதவிகளும் யாரும் செய்யவில்லை என்றும் தமக்கான நிவாரணங்களை பெற்றுத்தருமாறும் பிரதேச மக்கள் கோரிய நிலையில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலரை உடனடியாக அழைத்த நாடாளுமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலரை பணித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 16 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam