நோர்வேயில் மண்சரிவு - மண்ணுக்குள் புதையுண்ட வீடுகள்
நோர்வே ஒஸ்லோவை அண்மித்த கிராமம் ஒன்றில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு 12ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
அத்துடன் 21ற்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நோர்வே ஒஸ்லோவுக்கு அண்மையிலுள்ள ஜெர்ட்ரம் என்ற கிராமத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவை அடுத்து சுமார் 500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நோர்வே செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த இடர் ஏற்பட்ட பகுதியில் பொலிஸார் அமர்த்தப்பட்டுள்ளதாக உள்ளுர் பொலிஸ் செயற்பாட்டு தலைவர் ரொஜர் பீற்றர்ஸன் குறிப்பிட்டுள்ளார். நிலைமை மிகவும் மோசமாக உள்ளதெனவும் அங்குள்ள அனைத்து வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அவசர அழைப்புகள் கிடைக்கபெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிலைமையை பார்க்கும் போது இயற்கை எந்தளவுக்கு ஜெர்ட்ரம் கிராமத்தை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரிவதாகவும் இதுகுறித்து தாம் வருத்தமடைவதாகவும் நோர்வோ பிரதமர் எர்னா சோல்பர்க் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மண்சரிவு 210000 சதுர பரப்பை சேதப்படுத்தியதாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.