இலங்கையில் நிலவும் மோசமான வானிலை! ஒருவர் மரணம் - ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டம், திவுலபிட்டிய பிரதேச செயலகப்பிரிவைச் சேர்ந்த 64 வயதான ஒருவர், நேற்று (22) வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பதிவான அதிகபட்ச மழை
இந்த பேரிடர் சூழ்நிலை காரணமாக 1,966 குடும்பங்களைச் சேர்ந்த 7,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அவர்களில் 201 பேர் தற்போது 06 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த மோசமான வானிலை காரணமாக 4 மாவட்டங்களைச் சேர்ந்த 20 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்புடைய அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
மேலும், 123 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும், 2 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழையளவான 137.80 மி.மீ. அத்தனகல்ல பிரதேச செயலகத்தில் பதிவாகியுள்ளது.