நிவாரண பணியில் மோசடி தொடர்பிலான முறைப்பாடுகள் - ஸ்ரீநேசன் எம்பி வெளியிட்ட தகவல்
கடந்த காலத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, நிவாரண நடவடிக்கைகளில் மோசடி நடப்பது தொடர்பில் இதுவரையில் குறைந்தளவு முறைப்பாடுகளே கிடைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், "இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் சூறாவளி, மண்சரிவு அர்த்தங்கள் காரணமாக எங்களுடைய மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
வடக்கு - கிழக்கு மற்றும் மலையகம் போன்ற இடங்களில் இந்த பாதிப்புக்கள் இருக்கின்றன. வடக்கு - கிழக்கை பொருத்தமட்டில் வெள்ளத்தால் ஏற்பட்ட அனர்த்தம் அதிகம் என்று சொல்லலாம். அதில் வடக்கு பகுதியில் சூறாவளியும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
மலையகத்தை பொருத்தமட்டில் மலையகம் கூடுதலாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது மழை வீழ்ச்சியின் காரணமாக குளங்களில் நீர் அதிகரித்து இருந்தபடியால் அவற்றை திறக்க வேண்டிய ஒரு நிலைமையில் திறக்கப்பட்டதனால் மண் சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. மழைவீழ்ச்சியால் அந்த மண்சரிவுகள் அதிகமாக ஏற்பட்டிருக்கின்றன.
70 இலட்சம் நிதி..
எங்களுக்கு அவ்வப்போது முறைப்பாடுகள் கிடைக்கின்றன. இந்த முறைப்பாடுகளை நாங்கள் உரிய பிரதேச சபை செயலாளர் அரசாங்க அதிபர் போன்றவர்களுக்கு நாங்கள் அறிவித்துக் கொண்டிருக்கின்றோம்.

அதேபோன்று அமைச்சர் மட்டத்தில் கதைக்க வேண்டிய விடயங்களையும் அவ்வப்போது நாங்கள் கதைக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் கதைக்கின்றோம்.
பெரும்பாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நேற்றும் கூட ஏறாவூர் பக்கமாக இருந்தும் தன்னாமுனை பக்கமாக இருந்தும் அதேபோன்று படுவான்கரை பக்கம் இருந்தும் நாங்கள் ஆணைகட்டியவெளி போன்ற பிரதேசங்களுக்கு சென்றபோதும் அங்கு சில முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன.
வீதிகள் அமைக்கின்ற போது வடிகால்கள் அமைக்கப்படாமல் இருப்பதனாலும் இந்த வெள்ளப்பெருக்கள் ஏற்படக்கூடிய ஒரு நிலைமையை நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கிறது. நேற்றைய தினம் நாங்கள் ஆணைகட்டியவெளிக்கு சென்றபோது இந்த சமூலையடி வீதி பல கிராமங்கள் உரிய மக்கள் பயணிக்கின்ற ஒரு வீதி உடைந்து காணப்படுவதை அவதானித்தோம்.
அதனை முறையாக கட்டித் தர வேண்டும் என்று அங்கு இருக்கின்ற மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசிக்கொண்டிருந்தார்கள். அதற்குரிய நிதி ஒரு சுமார் ஒரு 70 இலட்சம் ஒதுக்கப்பட்டு இருந்தாலும் அந்த நிதி போதாது என்ற கருத்து இடம்பெற்றிருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் 2வது சிங்கிள் பாடல் எப்போது... வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam