நிவாரணத்தினை நம்பி சென்று ஏமாற்றம் அடைந்தவர் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் - கு. திலீபன்
நிவாரணத்தினை நம்பி சென்று ஏமாற்றம் அடைந்தவர் தான் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட இணைத்தலைவருமான கு. திலீபன் தெரிவித்துள்ளார். வவுனியா, மணிபுரத்தில் கிராமிய பொதுச்சந்தையை இன்று திறந்து வைத்து பின்னர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில், கோவிட் வைரஸ் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் நிவாரணம் வழங்கியிருந்தார்கள்.அப்போது எனது குடும்பத்தின் பதிவு வவுனியா,பிரமனாளங்குளத்தில் இருந்தது.
அந்த கிராமத்தில் பாதிரியார் ஒருவர் நிவாரண பொதி வழங்குகின்றார் என தகவல் கிடைத்து நானும், எனது மனைவியும் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றோம். அந்த பொதிகளை பார்த்த போது பெரிய பொதியாக இருந்தது.
அதனால் நானும், மனைவியும் சென்ற மோட்டார் சைக்கிளில் இந்த பொதியை கொண்டு செல்ல முடியாது இருக்கும் என எண்ணிக்கொண்டே நிவாரணம் கிடைக்கும் என அருகில் சென்ற எமக்கு அது கிடைக்கவில்லை.
பிரமனாளங்குளத்தில் பதிவு இருந்தாலும் வவுனியா நகரில் இருக்கின்றமையால் பொதியை தர முடியாது என கிராம சேவகர் தெரிவித்துவிட்டார்.
எனினும் நான் முரண்படவில்லை.ஏமாற்றத்துடன் திரும்பி வந்தோம். வறுமையையும், கஸ்டங்களையும் சந்தித்தே நான் இந்த நிலைக்கு வந்திருந்தேன்.
ஆகவே மக்களின் முகபாவத்தினை வைத்தே மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நான் அறிந்துகொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 8 மணி நேரம் முன்

Siragadikka Aasai: தானாக வந்து வசமாக சிக்கிய ரோகினி... குடும்பத்தினர் க்ரிஷ் அம்மாவை அறிவார்களா? Manithan

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
