எல்லைப் பிரச்சினையில் இணக்கமில்லை: வர்த்தக உடன்பாட்டுக்கு இணங்கியுள்ள இந்தியாவும் சீனாவும்
நேரடி விமானங்களை மீண்டும் ஆரம்பிக்கவும், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஓட்டங்களை அதிகரிக்கவும் இந்தியாவும் சீனாவும் இணங்கியுள்ளன.
2020ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு கொடிய எல்லை மோதலால் சேதமடைந்த இந்த இரண்டு அண்டை நாடுகளும், தமது உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்காகக் கொண்டு இந்த உடன்பாடுகளை எட்டியுள்ளன.
பேச்சுவார்த்தை
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் 24ஆவது சுற்று எல்லை பேச்சுவார்த்தைக்காக புதுடில்லிக்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டதை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியிடப்ப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் துருப்புக்கள் நிலைநிறுத்தம், எல்லைகளை நிர்ணயித்தல் மற்றும் எல்லை முகாமைத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இருப்பினும் எந்த முன்னேற்றமும் அடையப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் இணக்கம்
இந்த நிலையில் இது குறித்து 2026ஆம் ஆண்டில் சீனாவில் மீண்டும் சந்தித்து பேச இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக பீய்ஜிங் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் - காலை திருவிழா




