நடப்பது அநுர ஆட்சியா அல்லது ராஜபக்ச ஆட்சியா? இயக்குனர் வ.கௌதமன் கேள்வி

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Sri Lanka Rajapaksa Family Sri Lanka Government
By Kajinthan Mar 04, 2026 05:57 AM GMT
Report

இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலீடாக அரசாங்கம் புதிய சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறது. இதனை பார்க்கும் பொழுது அநுர ஆட்சியா அல்லது ராஜபக்ச ஆட்சியா என சந்தேகம் எழுகிறது என தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனரும், தென்னிந்திய பிரபல இயக்குனருமான வ.கௌதமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் இலங்கையின் அதிபர் அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் ஆயுதங்கள் எவையும் இன்றி நடை பயிற்சியில் ஈடுபடுகின்றார்.

க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு

க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு

கொடுத்த வாக்குறுதியை மீறிய அநுர

ஒரு ஜனாதிபதி அச்சமின்றி, நிம்மதியாக தமிழர் தாயகத்தில் நடை பயிற்சியில் ஈடுபடும்போது அங்கு பயங்கரவாதம் இல்லை என்ற கருத்து மிகச் சாதாரணமாகவே வலுப்பெறுகிறது. சம காலத்தில் நடைமுறையில் இருக்கின்ற பயங்கரவாத தடைச் சட்டத்தினால் பெரும்பாலும் தமிழர்களே பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்தச் சட்டத்தினால் ஜே.வி.பியை சேர்ந்த இளைஞர்களும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

நடப்பது அநுர ஆட்சியா அல்லது ராஜபக்ச ஆட்சியா? இயக்குனர் வ.கௌதமன் கேள்வி | Director V Gauthaman Question

மேலும், அநுரகுமார எதிர்க்கட்சியில் இருந்தபோது பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தார். அவரது தேர்தல் பிரகடனத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டமானது நீக்கப்படும் என்ற விடயத்தையும் குறிப்பிட்டிருந்தார்.

அவர் பதவியேற்று கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கடக்கின்றன. ஆனால் அந்தப் பயங்கரவாத தடைச் சட்டமானது இதுவரை நீக்கப்படவில்லை.

அதற்குப் பதிலீடாக அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் என்ற ஒன்றை கொண்டு வருவதற்கு அநுர அரசு முயற்சிக்கிற செய்தியறிந்து நான் மட்டுமல்ல உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் பேரதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

புதிதாகக் கொண்டு வரப்படவுள்ள சட்டமானது ஏற்கனவே உள்ள சட்டத்தை விட மிக மோசமான ஒரு குரூர சட்டமாக காணப்படுகின்றது. ஒரு வேளை ஏற்கனவே உள்ள சட்டத்தை நடைமுறையில் வைத்திருப்பதற்காக அநுர அரசு போடும் நாடகமா இது என எமக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

ஏனெனில் ஏற்கனவே உள்ள சட்டத்தை விட மோசமான ஒரு சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும்போது, புதிய சட்டத்தை விட ஏற்கனவே உள்ள சட்டமே பரவாயில்லை என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள். அதனைத்தான் அரசு விரும்புகின்றதா என்கிற பெருத்த சந்தேகத்தை உண்டுபண்ணுகிறது.

வரலாற்றில் முதல் தடவையாக தமிழர் தாயகத்தில் தேசிய கட்சி ஒன்றில் இருந்து அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ் மக்கள் தெரிவு செய்துள்ளனர். அந்த விடயத்தையாவது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஏன் புரிந்து கொள்ளவில்லை. உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நீங்கள் செய்கின்ற நன்றி கடன் இதுதானா?

ராஜபக்சர்களே இருந்திருக்கலாம்..

அநுரவும் ராஜபக்சகளின் கொடுங்கோல் வழியிலேயே என்றால் ஜனாதிபதியாக அநுர எதற்கு? ராஜபக்சகளே நாட்டினை தொடர்ந்து ஆண்டு இருக்கலாமே. நல்லிணக்கம், சமாதானம், சமத்துவம் என்று வாயால் மட்டும் கூறினால் சரியாகாது.

அதனை ஆட்சியில், நடைமுறையில் அரசியல் அறத்தோடு செய்து காட்ட வேண்டும். புத்தபெருமான் அருளிய போதனைகள் அத்தனையும் நடைமுறை வாழ்க்கைக்கு உகந்ததாக காணப்படுகின்றன.

நடப்பது அநுர ஆட்சியா அல்லது ராஜபக்ச ஆட்சியா? இயக்குனர் வ.கௌதமன் கேள்வி | Director V Gauthaman Question

ஆனால் அந்த புத்தபெருமானை வைத்து தமிழர் தாயகங்களில் காணிகளை ஆக்கிரமித்தல், தமிழ் மக்களுக்கு தீங்கு விளைவித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் அன்றாடம் அரங்கேற்றப்படுகின்றன.

அறத்தை போதித்த புத்தரின் பற்களில் இரத்தக்கறை படிந்துள்ளது. இது சிங்கள பேரினவாதிகளுக்கு மாத்திரமன்றி புத்தருக்கும் ஏற்பட்ட ஒரு இழுக்கு. புத்தருக்கு இழுக்கு ஏற்படுத்தியவர்களின் வரிசையின் இறுதியில் ராஜபக்சகளே இருப்பார்கள் என நாங்கள் நம்பினோம். ஆனால் அந்த வரிசை அநுரவின் ஆட்சியிலும் நீள்கிறது என்பது மனவருத்தமளிக்கிறது.

அனுர அவர்களே!புத்தரின் பற்களில் உள்ள கறையை போக்குவதற்கு உடனடியாக அதற்கு வெள்ளை அடியுங்கள். புத்தரின் புனிதத்திற்கு ஏற்பட்ட களங்கத்தை போக்குங்கள். அனைவரும் சமம் என்ற விடயத்தை ஆட்சியினூடாக நிரூபியுங்கள். இனவாதத்தை தூண்டும் காவியுடை தரித்தோரை எந்தவிதமான பாகுபாடும் இன்றி கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துங்கள்.

மக்களை ஒடுக்குகின்ற தேவையற்ற சட்டங்களை நீக்குங்கள். அதற்கு பதிலீடாக எந்தவொரு புதிய சட்டத்தையும் கொண்டுவர முயற்சிக்காதீர்கள். இவை எல்லாம் நடந்தால் நீங்கள் உண்மையான, மக்கள் நலன் மிக்க ஒரு ஜனாதிபதி என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். இல்லையாயின் நீங்களும் பத்தோடு ஒன்று பதினொன்று தான் என்றார். 

தாக்குதல்கள் தொடர்ந்தால் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது கைவைப்போம்: ஈரான் அதிரடி

தாக்குதல்கள் தொடர்ந்தால் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது கைவைப்போம்: ஈரான் அதிரடி

தாக்குதல் நடத்தி ஹிஸ்புல்லா மிகப்பெரிய தவறு செய்துவிட்டது! நெதன்யாகுவின் பகிரங்க எச்சரிக்கை

தாக்குதல் நடத்தி ஹிஸ்புல்லா மிகப்பெரிய தவறு செய்துவிட்டது! நெதன்யாகுவின் பகிரங்க எச்சரிக்கை

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US