கிராமிய பாலங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பணிப்பாளர் மற்றும் திட்ட பொறியாளர்கள் ஆய்வு
பொது நிர்வாகம்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் திட்ட பணிப்பாளர் மற்றும் திட்ட பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் சம்மாந்துறைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
கிராமிய பாலங்கள் அபிவிருத்தி
கிராமிய பாலங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கள நிலவரங்களை ஆய்வு செய்வதற்காக விஜயம் செய்த அவர்களுடன் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் உள்ளிட்ட குழுவினர் இணைந்து நேரடி கள ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, சிறிய பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு கிராமிய அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற நிலை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், மக்கள் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் பற்றியும் விரிவாக பரிசீலிக்கப்பட்டுள்ளது.
மேலும்இ திட்டங்கள் துரிதமாகவும் தரமான முறையிலும் நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட், சம்மாந்துறை பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம்.முஸ்தபா உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.









யாராக இருந்தாலும் சுடுங்கள்! அக்குரேகொட இரட்டைக்கொலையில் முன்னாள் இராணுவ அதிகாரியின் அதிர்ச்சி வாக்குமூலம்
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri