பதில் பொலிஸ்மா அதிபருக்கும் ஆணையகத்துக்கும் இடையில் நேரடி மோதல்
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பாக தேசிய பொலிஸ் ஆணையகம் (NPC) மற்றும் பொலிஸ் பதில் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த சர்ச்சை அரசியலமைப்பு பேரவை வரையில் சென்றுள்ளது.
முன்னதாக, பதில் பொலிஸ் அதிபர் வீரசூரிய, நியமனங்களைச் செய்யும் பொறுப்பை தனக்கு வழங்குமாறு கோரி தேசிய பொலிஸ் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார், ஆனால் அந்தக் கோரிக்கையை ஆணையகம் நிராகரித்திருந்தது.
சட்டமா அதிபரின் பரிந்துரை
பொலிஸ் திணைக்களத்தின் உள் பணிகளில் தேசிய பொலிஸ்க ஆணையம் தலையிடுவதாக கூறியே அவர் இந்த பொறுப்பை தம்மிடம் தருமாறு கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கைக்கு சட்டமா அதிபரின் அனுமதியும் இருந்ததாக பதில் பொலிஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் நியமனங்கள் அல்ல, இடமாற்றங்களே மேற்கொள்ளப்படுவதால், அதனை பொலிஸ் பதில் அதிபர் மேற்கொள்ளலாம் என்பதே சட்டமா அதிபரின் பரிந்துரையாக இருந்தது என்று பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
வகுக்கப்பட்ட நடைமுறை
எனினும் வகுக்கப்பட்ட நடைமுறையிலிருந்து விலக முடியாது என்றும் தேசிய பொலிஸ் ஆணையகம் தெரிவித்து விட்டது.
ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி லலித் ஏகநாயக்க தலைமையில் இந்த ஆணையகம் செயல்படுகிறது.
ஓய்வுபெற்ற அமைச்சகச் செயலாளர் ரேணுகா ஏகநாயக்க, ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன், சட்டத்தரணி; தில்சான் கபில ஜெயசூரிய, ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஏ.எம். இலியாஸ் மற்றும் ஓய்வுபெற்ற துணை பொலிஸ் அதிபர் ஜெயந்த ஜெயசிங்க ஆகியோர் ஆணையகத்தின் மற்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
