இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை
இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மே- செப்டம்பர் மாதங்களில் 2000 முதல் 5000 வரை இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவிட் தொற்றுநோய்க்குப் பின்னர் சுற்றுலாப் பயணிகளை அழைத்துவர மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து தூதரகங்கள் மற்றும் சுற்றுலா அமைச்சகங்களுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவின் ஏரோஃப்ளைட், ஷார்ஜாவின் ஏர் அரேபியா, துபாய், ஃப்ளைடூபாய், இந்தியா விஸ்டாரா விமான நிறுவனங்கள் மற்றும் குவைட் ஜசீரா விமான நிறுவனங்கள் மூலம் இலங்கைக்கு நேரடி விமான சேவையை தொடங்க கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் ரணதுங்க தெரிவித்தார்





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
