சவேந்திர சில்வா தொடர்பில் பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களின் இராஜதந்திர சந்திப்பு

Shavendra Silva United Kingdom Meeting
By Independent Writer Oct 18, 2021 02:18 PM GMT
Report

இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி புலம்பெயர் தமிழர்களினால் பிரித்தானியாவில் மற்றுமொரு உயர்மட்ட இராஜதந்திர சந்திப்பு ஒன்று கடந்த 15/10/2021 அன்று மதியம் நடைபெற்றுள்ளது.

பிரித்தானியாவின் கரோ மத்திய (Harrow Central) பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான   ஹரத் தோமஸ் (Hon. Gareth Thomas MP) அவர்களுடனேயே இந்த சந்திப்பு மெய்நிகர்வழி (Zoom) ஊடாக இடம்பெற்றுள்ளது.

சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளுமான திரு கீத் குலசேகரம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில் ஐநா நிபுணரான யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டத்தின் (ITJP) இயக்குனரான பிரான்சிஸ் கரிசன் (Francis Harrison), இனப்படுகொலையை சர்வதேச நீதிமன்றிற்கு (ICC) எடுத்துச்செல்லும் வழக்கினை முன்னெடுத்துவரும் மூத்த வழக்கறிஞர் திரு அருண் கணநாதன், தொழில்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் (Tamils for Labour) பணிப்பாளர் திரு சென் கந்தையா அவர்கள் மற்றும் நாடுகடந்த அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினராகிய திரு சொக்கலிங்கம் யோகலிங்கம் அவர்கள் கலந்துகொண்டு கருத்துக்களை பரிமாறினர். 

கீத் குலசேகரம்   தனது தலைமை உரையின் போது,

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான 58 ஆவது படைப்பிரிவிற்கு தலைமை தாங்கி இராணுவத்தை நேரடியாக வழி நடத்திய சவேந்திர சில்வாவினை தடை செய்ய போதுமான ஆதாரங்களை ஏற்கனவே ITJP சமர்ப்பித்திருந்த போதும், பிரித்தானிய வெளிவிவகார அமைப்பு இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதால், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டிய தருணம் வந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மட்டுமன்றி, தற்போது இலங்கையில் தொடரும் ஆள் கடத்தல் மற்றும் சித்திரவதைகளும் சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத படைகளே மேற்கொண்டுவருவதால் அதற்கும் சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும், சந்திப்பில் கலந்துகொண்ட சித்திரவதைக்குள்ளானவர்கள் இதற்கு நேரடி சாட்சி என்றும் தெரிவித்தார்.

பிரான்சிஸ் கரிசன் அவர்கள் இலங்கையில் தொடரும் சித்திரவதையை தாங்கள் ஆவணப்படுத்தியுள்ளதோடு, ஏனைய யுத்த குற்றவாளிகளுக்கு எதிராக ஆவணலகளை தயார்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

எதிர்வரும் 20 October 2021 ஆரம்பிக்கப்படவுள்ள மக்கன்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவில் (APPG for Magnitsky Sanctions) இணையும் படியும் கேட்டுக்கொண்டார்.

அருண் கணநாதன் மற்றும் சென் கந்தையா அவர்கள் சவேந்திர சில்வாவை தடைசெய்வது பற்றி ஒரு விவாத்த்தை பிரித்தானிய பாராளுமன்றில் கொண்டுவர ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும், அதற்கு ஆதரவு தரும்படியும் கேட்டுக்கொண்டனர்.

மேற்படி சந்திப்பில் சித்திரவதையில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களும் மற்றும் நாடுகடந்த அரசின் செயற்பாட்டாளர்களுமான பொன்னையா யோகராஜா, சதீஷ் குலசேகரம், ஶ்ரீ அபிராமி ஶ்ரீ பாலேஸ்வரன், அரவிந்தராஐ்ந ல்லதம்பி, வசிதரன் சதாசிவம், கௌசிகன் சசிகுமார், ஜனுஷ்டன் நவரத்தினம், ஜனகன் கணேஷ், றஜூவன் பவளகாந்தன், ரஞ்சினி யோகராஜா, சாதந்லோயிற்றன் புயலேந்திரன் மற்றும்கு மார்சஞ்சிக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு தங்கள் சித்திரவதை அனுபவர்களை நாடாளுமன்ற உறுப்பினருடன் பகிர்ந்து கொண்டு, பிரித்தானியா தமிழருக்கு நியாயம் பெற்றுத்தரும் முயற்சியில் தமது உண்மையான ஈடுபாட்டை நிரூபிக்க இந்த சிறிய ஆனால் முக்கிய படி உதவும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர், தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியதுடன், தமிழ் மக்கள் சார்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

அதேவேளை, அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்கட்சியின் மற்றய பாராளுமன்ற உறுப்பினர்களான சிவேன் மக்டோனா மற்றும் ஏனையவர்க்ளுடன் மேலும் இது தொடர்பில் கலந்துரையாடி குறித்த விடயத்தினை நாடாளுமன்ற விவாதத்திற்கு அனுமதி பெற முயற்சிகளை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.

சவேந்திர சில்வாவை தடைசெய்யும் முயற்சிக்கு சர்வதேச ஆதரவை திரட்டும் நோக்கில் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த புலம்பெயர் தமிழ் இளையோர் இணைய வழி கையெழுத்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்ததுடன் அனைத்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

GalleryGallery
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
கண்ணீர் அஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US