மூடிய அறையில் இரகசிய உரையாடல்: ஈழத்தமிழர் - இந்தியாவின் உறவில் பெரும் பிளவு..! (VIDEO)
த.தே.கூட்டமைப்பு தமிழ் மக்கள் சார்ந்த நலன்களை முன்நிலைப்படுத்தாமல், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் விருப்பத்தின் அடிப்படையில் செயற்பட்டது பற்றிய கேள்விகள், விமர்சனங்கள் அரசியல் ஆய்வாளர்களினால் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
இலங்கையின் ஜனாதிபதி தெரிவு தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற த.தே.கூட்டமைப்பின் கலந்துரையாடலின்போது, இந்தியத்தூதரக அதிகாரியின் தொலைபேசி உரையாடலை பகிரங்கப்படுத்திய விவகாரம், டலஸ் அழகப்பெரும ஜனாதிபதியாவதை அமெரிக்கா விரும்புகின்றது என்று சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள்...- இவைகள் த.தே.கூட்டமைப்பை ஒரு இராஜதந்திர நெருக்கடிக்குள் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகின்றது.
அத்தோடு இந்தியாவிடம் இருந்து ஈழத்தமிழரைப் பிரிக்கும் சதி நடவடிக்கை ஒன்று திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதா என்ற சந்தேகமும் சில கூட்டமைப்பு உறுப்பினர்களால் எழுப்பப்பட்டு வருகின்றது.
இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' ஒளியாவனம்: