கொழும்பிலுள்ள இராஜதந்திர சமூகம் வழங்கிய முக்கிய பங்களிப்பு
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் வகையில், கொழும்பிலுள்ள இராஜதந்திர சமூகம் ஒன்றிணைந்து 3.6 மில்லியன் இலங்கை ரூபாய் தனிப்பட்ட பங்களிப்பை வழங்கியுள்ளது.
இந்த நிவாரண முயற்சிகளுக்கு உதவுவதற்காக பல தூதுவர்கள் தங்கள் சொந்த சம்பளத்தில் இருந்து நன்கொடை அளித்துள்ளனர்.
அமைச்சரிடம் கையளிப்பு
இந்த நன்கொடையை, இராஜதந்திர சமூகத்தின் தலைவரும் இந்தோனேசியத் தூதுவருமான தேவி குஸ்டினா டோபிங், வெளிவிவகார அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் கையளித்தார்.

மாலைதீவு, இத்தாலி, கொரியா, சுவிட்சர்லாந்து, பலஸ்தீனம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளின் தூதுவர்கள், இந்தோனேசியத் தூதுவருடன் இணைந்து இந்தத் திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்கள் ஆதரவையும், இந்த காலகட்டத்தில் இலங்கைக்குத் தங்கள் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த உதவிகள், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெரும் ஆறுதலை அளிக்கும் என்றும், இராஜதந்திர சமூகம் இலங்கையின் மீட்பு நடவடிக்கைகளுக்குத் துணை நிற்கிறது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri