கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பில் வெளியவரும் திடுக்கிடும் பின்னணிகள் (video)
இரண்டு கோடி ரூபாயினை கப்பமாகப் பெறுவதற்காக 2000ம் ஆண்டில் எயிட்கன் ஸ்பென்ஸ் நிறுவனத்தின் அப்போதைய தலைவரான ஜீ. எஸ். விக்ரமசிங்க கடத்திச் செல்லப்பட்ட சம்பவமானது கோடிஸ்வர வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு பெறப்பட்ட கூடிய கப்பமாக இருந்ததால் வரலாற்றில் முக்கியமான சம்பவமாக இருந்தது.
எமது நாட்டின் மேல்மட்ட வர்த்தகச் சமூகம், ஜீ. எஸ். விக்ரமசிங்கவின் கடத்தலின் பின்னர் அச்சமடைந்திருந்தது.
பின்னர் மீண்டும் அவ்வாறான அச்சம் எமது நாட்டின் மேல் மட்ட வர்த்தக சமூகத்தினருக்கு ஏற்பட்டிருப்பது இந்நாட்டின் பிரபலமான வர்த்தக குடும்பத்தின் அங்கத்தவரான ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் தலைவர் சந்திரா ஷாப்டரின் மகனான தினேஷ் ஷாப்டரின் மர்ம கொலையத் தொடர்ந்தேயாகும்.
நிதித்துறையில் 25 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட தினேஷ் ஷாப்டரின் மர்ம கொலை தொடர்பில் இதுவரை வெளியான தகவல்களுடன் அதன் பின்னணி தொடர்பிலான முழுமையான தகவல்களை தொகுத்து வழங்குகின்றது காணொளி,





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 18 மணி நேரம் முன்

நெருக்கமானவர் உடன் Vacation சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. புகைப்படங்கள் இதோ Cineulagam
