பொது தேர்தலுக்கு முன்னதாக பாரிய அரசியல் கூட்டணிக்கு திலித் ஜயவீர முயற்சி
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பாரிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சியில் திலித் ஜயவீர ஈடுபட்டுள்ளார்.
பிரபல வர்த்தகரான திலித் ஜயவீர, அண்மைக் காலத்தில் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது மட்டுமன்றி மௌபிம ஜனதா கட்சி என்றொரு கட்சியின் தலைவராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் கட்சியின் சார்பில் அவர் போட்டியிட்டார்.
புதிய சின்னம்
இந்நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பாரிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்கி இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
அதற்காக ஏனைய கட்சிகளில் உள்ள மக்கள் செல்வாக்கு உள்ள அரசியல்வாதிகளுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கட்சிக்கு புதிய சின்னம் ஒன்றைப் பெற்றுக் கொள்வது குறித்தும் அவர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
