நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சியின் சகோதரர் கைது
தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நிஹால் வெதஆரச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 9ம் திகதி நாடு முழுவதும் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் நிஹால் வெதஆரச்சி கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

திலிப் வெதஆரச்சி கைது
இன்று நண்பகல் அளவில் தங்காலை பொலிஸார் நிஹால் வெதஆரச்சியைக் கைது செய்துள்ளனர்.
அவரிடம் தற்போதைக்கு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
மேலும், இவர் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தோஷ செய்தியை வெளியிட்டுளள சிறகடிக்க ஆசை வெற்றி மற்றும் அவரது மனைவி... ஆனா இது வேற நியூஸ் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri