யாழில் டிஜிட்டல் வாக்காளர் திட்டம் அறிமுகம்
LIRNEasia நிறுவனத்தின் நிதியுதவியுடன் கேமிங் செயலியை அடிப்படையாகக் கொண்ட “ வாக்காளர் அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டம்” யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவபாலராஜா தினேஷ் ஒருங்கிணைப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலியானது, நேற்று(01.07.2026) கற்றல், விளையாட்டு, வாக்கு உள்ளிட்ட செயன்முறையில் தகவல்களையும் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டம்
CaFFE அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ஷவின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக LIRNEasia நிறுவனத்தின் முகாமையாளர் சமரத்துங்க கலந்து கொண்டுள்ளார்.

அத்துடன், பிரதம வளவாளராக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) முன்னாள் செய்திப் பணிப்பாளரும் டிஜிட்டல் ஊடகப் பயிற்றுவிப்பாளருமான திரு. ஜூனைட் எம். ஹாரிஸ் பங்கேற்றுள்ளார்.
இதன்போது, டிஜிட்டல் தளத்தின் ஊடாக தேர்தல் செயல்முறை பற்றிய விவரங்களை தெரிந்துக் கொள்ளும் வாய்ப்பு ஒவ்வொரு இளைஞருக்கும் வழங்கப்பட்டுள்ளது.