மகிந்தவின் அனுதாபத்தை பெற முயன்ற கோட்டாபய! கருத்திற்கொள்ளாத மகிந்த
கடினமான முடிவு
தனது சகோதரரும் ஆலோசகருமான மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து விலகக் கூறியதே, தனது வாழ்க்கையில் மிகவும் கடினமான முடிவு என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமையன்று நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின் இறுதியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கூட்டத்தில் பங்கேற்றவர்கள், மகிந்த ராஜபக்சவை நோக்கினர்.

பொருட்படுத்தாத மகிந்த
எனினும் அவர், அதனை பொருட்படுத்தவில்லை. பதிலாக சுற்றுப்புறங்களில் கவனம் செலுத்திக்கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு தழுவிய கோரிக்கையின்படி, கோட்டாபய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
எனினும் இந்த வலியுறுத்தலை நீர்த்துப் போகும் செய்யும் ஒரு காரியமாகவே மகிந்த குறிவைக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதேநேரம் மக்கள் தாம் விலகுவதை விரும்பவில்லை என்று மகிந்த கூறினாலும், அவர் விலகிய பின்னர் அது தொடர்பில் எதிர்ப்புக்கள் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan