மட்டக்களப்பில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குமாரபுரம் பிரதேசத்தில் தொடருந்தில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (23.11.2023) மாலை இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு- குமாரபுரம் பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் விசாரணை
கொழும்பு கோட்டை நோக்கி மட்டக்களப்பிலிருந்து பயணித்த தொடருந்தில் மோதப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த நபர் மது போதையில் தொடருந்து பாதையில் சென்று கொண்டிருந்தமையே விபத்திற்கான காரணமென பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

இந்தியா மீதான 50% வரி: இது அரசியலமைப்பிற்கு எதிரானது! அமெரிக்க பொருளாதார நிபுணர் எதிர்ப்பு News Lankasri
