டொலருக்காக சுற்றுலா பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியதாக இலங்கை?
இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில்லை என்று சுற்றுலாப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அந்த பகுதிகளை சோதனையினையிட்ட போது சுற்றுலா பயணிகள் முகக் கவசமின்றி நடமாடுவதனை அவதானிக்க முடிந்துள்ளது.
அதற்கமைய, சுற்றுலாத் தலங்களாகக் கருதப்படும் காலி, மாத்தறை, ஹிக்கடுவ, மிரிஸ்ஸ உள்ளிட்ட நகர்ப்புறங்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் பொது இடங்களுக்குச் செல்வதை அவதானிக்க முடிந்தது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டிஆராச்சியிடம் வினவிய போது, சுற்றுலா பயணிகளை முகக் கவசம் அணியுமாறு கட்டாயப்படுத்த முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். எனினும் அதற்கு தற்போது உரிய காலம் அல்ல என அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டவர் ஒருவரிடம் சென்று முகக் கவசம் அணியுமாறு கூறும் போது, “உங்கள் நாடு பாதுகாப்பாக இருப்பதாகவும் 90% தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் கூறுகிறீர்கள். பிறகு நாம் ஏன் முகக் கவசம் அணிய வேண்டும்?” என சுற்றுலா பயணிகள் வினவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
