ஜனாதிபதியின் உத்தரவால் பசில் ஏமாற்றதுடன் அமெரிக்கா சென்றாரா?
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa)ஏதோ ஒருவித ஏமாற்றத்துடனேயே அமெரிக்கா புறப்பட்டுச் சென்றதாக தெரியவருகிறது என சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் பசில் ராஜபக்ச கடந்த வாரம் ஆளும் கட்சியின் அவசரக் கூட்டம் ஒன்றை ஒன்றை ஒழுங்கு செய்ததாக நம்பிக்கையான தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த கூட்டத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது, உயர்மட்ட உத்தரவின்படி கூட்டத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், அமைச்சர் பசில் ஒருவித ஏமாற்றத்துடன் காணப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் இரவே அமெரிக்க புறப்பட்டுச் சென்றதாக பேசப்படுகிறது.
அத்துடன் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை தொடர்புக்கொள்ள முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன.
எவ்வாறாயினும் அமைச்சர் பசில் தலைமையில் நடைபெறவிருந்த இந்த கூட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே இரத்துச் செய்யுமாறு உத்தரவிட்டதாக தெரியவருகிறது.
சிங்கப்பூரில் இருக்கும் ஜனாதிபதிக்கு ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளமை தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து கூட்டத்தை இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதுடன் நாடாளுமன்றத்தின் அவை முதல்வரின் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்தை அலுவலகத்தின் அதிகாரிகள் இரத்துச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை சிங்கப்பூரில் உள்ள ஜனாதிபதி தனது பயணத்தை துரிதமாக நிறைவு செய்துக்கொண்டு இலங்கை புறப்பட்டதாக கூறப்படுகிறது.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 16 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
