அமெரிக்க டொலரில் வீடுகளை வாங்க விண்ணப்பிக்கும் புலம்பெயர் இலங்கையர்கள்
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு 3 வீடுகளை விற்பனை செய்ததன் மூலம் 43,700 அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கம் ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் உள்ள வீடுகளை அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த டொலர்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளன.
டொலருக்கு விற்கப்படும் வீடுகள்
பன்னிப்பிட்டிய - வியாட்புர, கொட்டாவ மற்றும் மாலம்பே பிரதேசங்களில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வீட்டுத் தொகுதிகளில் இந்த வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இன்னும் 10 வீடுகளை வாங்குவதற்கு புலம்பெயர்ந்த இலங்கையர்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு இராச்சியம், பிரித்தானியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்கள் இலங்கையில் வீடுகளை கொள்வனவு செய்ய முன்னதாக புதிய திட்டமொன்று கொண்டு வரப்பட்டிருந்தது.
அதன்படி டொலர்களை பயன்படுத்தி வீடுகளை கொள்வனவு செய்யும் வெளிநாட்டு இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்திருந்தது.
இவ்வாறு டொலர்களை பயன்படுத்தி வீடுகளை கொள்வனவு செய்பவர்களுக்கு 10 வீதம் சலுகை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவ சபை அனுமதி வழங்கியிருந்தது.
புதிய முறை அறிமுகம்
அதற்கமைய, நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படும் நடுத்தர வருமான வீட்டுத் திட்டங்களில் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடிக்கு மற்றொரு தீர்வாக இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் இரண்டு நடுத்தர வருமான வீட்டுத் திட்டங்களான பொரளை ஓவல் வியூ வீடமைப்புத் திட்டத்தில் 608 வீடுகளும், அங்கொட லேக் ரெஸ்ட் திட்டத்தில் 500 வீடுகளும் உள்ளன.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு டொலர்களை பயன்படுத்தி இந்த வீடுகளை கொள்வனவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
