புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் விடாப்பிடி! நிஜக்கண்
ஐநா சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ(Gotabhaya Rajapaksha) செப்ரெம்பர் 22 ஆம் திகதி உரை நிகழ்த்தினார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதியின் கருத்தை பலரும் எதிர்பார்த்திருந்தனர்.
ஏனெனில், இலங்கையைப் பொறுத்த வரையில் ஜனாதிபதியான பிறகு முக்கியமாக இணைந்து பேசும் முதலாவது சந்தர்ப்பமாகவும் பொதுச்சபை அரங்கில் உரையாற்றும் முதலாவது சந்தர்ப்பமாகவும் அந்நாள் பதிவாகிக் கொண்டது. அவர் ஐ நா அமர்வு இடம்பெற முன்னரே நியுயோர்க் நகரில் ஐநா பொதுச் செயலாளர் நாயகம் அன்ரனி குட்ரசை சந்தித்த போது வெளிப்படுத்திய கருத்துக்களினால் சலசலப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன.
அதில் புலம் பெயர் தரப்புர்க்களுடன் பேசுவற்தற்கு ஜனாதிபதி தயாராக உள்ளதாகவும் அழைப்பு விடுத்திருந்தார்.
ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று எந்த புலம்பெயர் அமைப்புக்கள் ஜனாதிபதியை சந்திக்க போகின்றனர் என்கின்ற நிலைப்பாடு காணப்படினும் மறுபுறத்தில் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றுக் கொள்வதிலும் புலம் பெயர் அமைப்புக்களிற்கு தயக்க நிலையும் ஏற்பட்டிருக்கும் என்பதையும் மறுக்க முடியாது.
இந்த நிலையில், ஜனாதிபதி ஐநாவில் ஆற்றிய உரையின் பின்னணியில் உள்ள சூட்சுமம் தொடர்பிலும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்புத் தொடர்பிலும் ஆராய்கின்றது இன்றைய நிஜக்கண்.
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan