நாட்டை வாங்குமளவு பலம் படைத்த புலம்பெயர் இலங்கையர்கள்: வெளிநாட்டு பணம் அனுப்புவதில் ஏன் நெருக்கடி..!
புலம்பெயர் இலங்கையர்களாலும் இலங்கையின் பொருளாதாரத்தில் கனிசமான அளவு செல்வாக்கை செலுத்த முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி அல்லது இலங்கையின் பெறுமதி என்று பார்ப்போமாக இருந்தால் இப்போது 70 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்டதான ஒரு பொருளாதாரமாக இருப்பதாக இருக்கிறது.
சில புலம்பெயர் இலங்கையர்களின் நிதி நிலைமை எடுத்து பார்ப்போமாக இருந்தால் 70 பில்லியன் டொலர்களை கொண்ட பலர் இருக்கின்றார்கள். இலங்கையை வாங்கக்கூடிய அளவிற்கு பலர் பண பலம் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.
ஆனால் இதனை அடிப்படையாக வைத்துக் கொண்டு இலங்கையை வாங்கி விடுவார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் கணிசமான அளவு செல்வாக்கு செலுத்தக்கூடியதாக இருக்கும்.