புலம்பெயர் உறவுகள் மற்றும் பிரித்தானிய தமிழர் சார்ந்த அமைப்புகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
புலம்பெயர் உறவுகளிடமிருந்து நாட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை பெற்றக்கொடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று பிரித்தானியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழர் உதவி சேவை மற்றும் ஐபிசி தமிழ் இணைந்து இந்த கலந்துரையாடலை ஒழுங்கு செய்துள்ளனர்.
இந்த கலந்துரையாடல் Natchathra hall,Snakey lane,Feltham Middle sex,TW13 7Na இல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் 9 மணி வரை இடம்பெற உள்ளது.
பட்டினி சாவை நெருங்கிக்கொண்டிருக்கும் இலங்கை மக்களுக்கு புலம்பெயர் உறவுகள் செய்ய வேண்டியது என்ன? இந்தத் தருணத்தில் புலம்பெயர் உறவுகள் உதவி கரம் நீட்டுவது பொருத்தமானதா? மற்றும் எவ்வாறான உதவிகளை செய்ய வேண்டும், அதனை எப்படி செய்ய வேண்டும். என்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன.
இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொள்ள புலம்பெயர் தமிழர்களுக்கும் பிரித்தானியாவில் இயங்கும் அனைத்து தமிழர் சார்ந்த அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக தொடர்புகளுக்கு,
07525050010
Email:tamilshelplineworld@gmail.com
